உக்ரைனுக்கு மீண்டும் ரூ.30 ஆயிரம் கோடி அமெரிக்கா உதவி!!
உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. இதில் இருதரப்பிலும் ஏராளமான உயிர்கள் பலியான போதும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், உக்ரைனுக்கு இந்திய மதிப்பில் மேலும் ரூ. 30 ஆயிரம் கோடிக்கும் அதிகமான ராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது உக்ரைனுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய ராணுவ உதவி என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, பிராட்லி எனப்படும் காலாட்படைக்கான கவச வாகனங்கள், ஹேவிட்சர்கள் எனப்படும் தானியங்கி பீரங்கிகள், மார்டர் என அழைக்கப்படும் இலகு ரக பீரங்கிகள் உள்ளிட்ட ராணுவ உதவிகள் உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.