ஜனாதிபதி விளக்கம் கேட்க முடியாது !!
தேர்தல் ஆணைக்குழுவை அழைத்து ஜனாதிபதி விளக்கம் கேட்க முடியாது. தேர்தல் ஆணைக்குழுவில் ஜனாதிபதி தலையிட அனுமதி இல்லை. முதுகெலும்பு இல்லாதவர்கள் தேர்தல் ஆணைக்குழுவில் பதவி வகிக்க வேண்டாம் என ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.
நீர்கொழும்பில் இன்று(08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.