சீனாவில் போலி இந்திய கொரோனா மருந்துகள் விற்பனை!!
சீனாவில் கொரோனாவின் பரவல் உச்சத்தை தொட்டது.இதனால் தினமும் ஏராளமானோர் கொரனோ நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நோயை தடுக்க சீன அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரிமொவிர், பஞ்சிஸ்டா, மல்லுநெட் ஆகிய 4 மருந்துகளுகளின் தேவை சீனாவில் அதிகமாக உள்ளது. அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த இந்தியா அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்த மருந்துகளை பயன்படுத்த சீனா இன்னும் அனுமதி வழங்கவில்லை.
இதனால் பலர் ஆன்லைன் மூலம் இந்த மருந்துகளை வாங்கி வருகின்றனர். இந்திய மருந்துகளுக்கு மவுசு அதிகரித்து உள்ளதால் சீனாவில் கள்ள மார்க்கெட்டில் போலி கொரோனா மருந்துகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சீனாவில் புழக்கத்தில் உள்ள இந்திய மருந்துகளில் அதிக அளவு போலியானது என சீன சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.