மனுவை தள்ளுபடி செய்யுமாறு மனு !!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரிக்காமல் தள்ளுபடி செய்யுமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் இரண்டு இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள், பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்டோரை பிரதிவாதிகளாக பெயரிட்டு, ஓய்வுபெற்ற கேர்ணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
முழு நாடும் நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றும் பொது மக்கள் மீது சுமையை ஏற்படுத்தும் என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வத்தகல மற்றும் சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர ஆகியோரினால் இடையீட்டு மனுக்கள் தாக்கல் இன்று (09) செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுவில் எவ்வித சட்ட அடிப்படையும் இல்லை என்றும் மனுவை பராமரிப்பதற்கு நியாயமான சட்ட அடிப்படை உள்ளது என்பதை மனுதாரர் நிறுவத் தவறிவிட்டதாகவும் இடையீட்டு மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.