அச்சத்தில் மூழ்கிய சீனா – 90% பேருக்கு கொரோனா !!
சீனாவின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான ஹெனானில் ஏறத்தாழ 90 வீதமான மக்கள் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் பூஜ்ஜிய கொரோனா கொள்கையை சீனா கைவிட்ட பின்னர், ஹெனான் மாகாணத்தில் சுமார் 88.5 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
ஹெனானில் 99.4 மில்லியன் மக்கள்தொகை இருக்கும் நிலையில், சுமார் 89.0 வீதமான மக்கள் இப்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பாதிக்கப்பட்டுள்ள 88.5 மில்லியன் மக்களின் நிலை மோசமானால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வாய்ப்புகள் இல்லை என்பதால் சீன அரசு தற்போது அச்சத்தில் மூழ்கியுள்ளது.
ஏற்கனவே சீனாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க போதுமான இட வசதிகள் இல்லாமல் இருக்கும் நிலையில் ஹெனான் மாகாணம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் சீனாவில் மீண்டும் முடக்கநிலை அறிவிக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.