தங்கம் விலை உயர்வு குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?
இந்தியாவை பொறுத்தவரை கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் தங்கத்தின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டது முதலே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. சந்தை முதலீட்டாளர்கள் ஜெரோம் பவலின் பேச்சு மற்றும் அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறித்தான தரவினை முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஆக வரவிருக்கும் நாட்களில் இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். தற்போது சீனாவில் மீண்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இது தேவையினை ஊக்கப்படுத்தலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இந்த ஆண்டில் புதிய வரலாற்று உச்சத்தினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலையுயர்ந்த ஆபரணங்களின் விலையானது நடப்பு ஆண்டில் டாலருக்கு எதிராக 2.36 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பார்க்கும்போது தங்கம் விலையானது 14.55 சதவீதம் ஏற்றத்தில் காணப்பட்டது. பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தங்கத்தின் தேவையானது ஏற்கனவே மீண்டும் வரத் தொடங்கியுள்ளது. இது இனியும் அதிகரிக்கலாம்.
இதன் காரணமாக தங்கம் விலை இன்னும் அதிகரிக்கலாம். தொடர்ந்து சர்வதேச அளவில் அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்கள் மத்தியில், தங்கத்தின் முதலீட்டு தேவையானது அதிகரித்துள்ளது. இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். நடப்பு ஆண்டில் மத்திய வங்கிகள் தங்கத்தினை வாங்கி வைக்கலாம். இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். குறிப்பாக சீனா, இந்தியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தினை வாங்கி வைக்கலாம். இந்த போக்கு கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டுள்ளது. இதற்கிடையில் இன்னும் 6 காரணிகள் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை, டாலர் மதிப்பு, சீனா தைவான் பிரச்சனை என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இந்தியாவினை பொறுத்தவரையில் விழாக்கால பருவத்தில் தங்கத்தின் தேவை அதிகரிக்கிறது. மொத்தத்தில் நடப்பு ஆண்டில் தங்கம் விலையானது உச்சம் தொடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.