உலக வரைபடத்திலிருந்து ரஷ்யாவை அழிக்கும் நகர்வில் மேற்குலகு – பிரான்ஸ் காணாமல் ஆக்கப்படும்; பகிரங்க எச்சரிக்கை!
பிரான்ஸ் என்ற நாடே இருக்கக்கூடாது என்று ரஷ்யாவின் ஓய்வு பெற்ற தளபதியான Andrey Gurulyov என்பவர் ஆத்திரம் வெளியிட்டுள்ளார்.
மேலும் பிரான்சையோ அல்லது பிரித்தானியாவையோ அழிக்கும் அளவுக்கு தங்களிடம் ஆயுதங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பிரான்ஸ் நாட்டையே இல்லாமல் செய்துவிடுவோம் என ரஷ்ய தரப்பிலிருந்து எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி பிரான்ஸ் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் எனவும் பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரில், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு அளித்துவருவதையடுத்து, பிரான்ஸ் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவோம் என புடின் ஆதரவாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.
புடின் ஆதரவாளரான Vladimir Solovyov என்பவர், பிரான்ஸ் அதிபர் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி வருகிறார், ஆகவே, பிரான்ஸ் எங்களைத் தாக்கியபின் அவர்களைத் தாக்காமல், முன்கூட்டியே பிரான்சைத் நாம் தாக்குவோம் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் முன்பு பிரான்ஸ் என்று ஒரு நாடு இருந்தது, இப்போது அது இல்லை என்று கூறும் நிலை உருவானால் எப்படி இருக்கும் என்றும் Andrey Gurulyov கூறியுள்ளார்.
அதேவேளை, ரஷ்யாவை தனியாக பிரிப்பதற்கு மேற்குலக நாடுகள் முயற்சிப்பதாக கிரெம்ளின் குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யா இப்போது உக்ரைனில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவக் கூட்டணியுடன் சண்டையிட்டு வருவதாகவும், மேற்கத்திய நாடுகள், நாட்டை தொடர்ந்து அழித்து வருவதாகவும் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலய்(Nikolai) தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனில் நடைபெறும் நிகழ்வுகள் மொஸ்கோவிற்கும், கிய்விற்கும் இடையிலானவை அல்ல எனவும், ரஷ்யாவிற்கும், நேட்டோவிற்கும் இடையில் நடைபெறும் மோதல் எனவும் தெரிவித்தள்ளார்.
உலக அரசியல் வரைப்படத்தில் இருந்து ரஷ்யாவை அழிப்பதே மேற்கத்திய நாடுகளின் திட்டம் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.