அவமதிப்பு வழக்கில் இம்ரானை கைது செய்ய உத்தரவு: தேர்தல் ஆணையம் அதிரடி!!
பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நவாஸ் ஷெரிப்பின் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதன் மூலம் பிரிவினைக் கொள்கையை கடைபிடித்ததாக முன்னாள் பிரதமர் இம்ரான்கான்,பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் மூத்த தலைவர்கள் தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையர் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வந்தனர்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கடந்தாண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இம்ரான் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், இது குறித்து விசாரித்து வந்த பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் 4 உறுப்பினர்கள் கொண்ட குழு, இம்ரான் மற்றும் அவரது கட்சித் தலைவர்களை ஜாமீனில் வெளிவரக் கூடிய வாராண்டில் கைது செய்ய உத்தரவிட்டது.