நாசாவில் இந்தியருக்கு முக்கிய பதவி!!
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் புதிய தலைமை தொழில்நுட்ப வல்லுநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளித் துறை நிபுணர் ஏசி சரனியா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையகத்தில் தொழில்நுட்ப கொள்கை மற்றும் திட்டங்களில் நாசாவின் நிர்வாகி பில் நெல்சனின் முதன்மை ஆலோசகராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவரான ஏசி சரனியா நாசாவில் இணைவதற்கு முன்பு, சான்றிதழ் பெற்ற தனியார் விண்வெளி நிறுவனமான ரோபோடிக்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பு மூலோபாயத்தின் துணைத்தலைவராக பணியாற்றியுள்ளார். இது தவிர விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு முக்கிய பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.