;
Athirady Tamil News

பண்டாரிக்குளம் பாடசாலை செல்லும் வீதியை புனரமைப்புச் செய்யுமாறு கோரி மகஜர் கையளிப்பு!

0

வவுனியா வைரவப்புளியங்குளத்திலிருந்து பண்டாரிக்குளம் செல்லும் மூன்று கிலோ மீற்றர் வீதியை தற்காலிகமாக புனரமைப்புச் செய்து பாடசாலை செல்லும் மாணவர்களின் நலன் கருதி உடனடியாக புனரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் பண்டாரிகுளம் வட்டார நகரசபை உறுப்பினர் கே. சுமந்திரனிடம் மகஜரினைக் கையளித்துள்ளனர்.

பண்டாரிக்குளம், முனியப்பர்கோவிலடி, வேப்பங்குளம் செல்லும் பிரதான வீதியும் பண்டாரிக்குளம் விபுலானந்தாக் கல்லூரி செல்லும் குறித்த வீதியை மாணவர்கள் உட்பட பலர் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றார்கள். இந்த வீதி நீண்டகாலமாக புனரமைப்புச் செய்யப்படவில்லை. தற்போது இவ்வீதி குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றது. இதனைப் புனரமைத்துத் தருமாறு பலரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது புனரமைப்புச் செய்யப்படவில்லை. தற்போது இவ்வீதியை பராமரிப்பதற்கு பணம் இல்லை என்று கைவிரிக்கப்பட்டுள்ளது எனவே இதனை மக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக தறாகாலிகமாகவேனும் புனரமைப்புச் செய்துதருமாறு அப்பகுதி மக்கள் சிலர் ஒன்றிணைந்து கையெழுத்திட்ட மகஜர் ஒன்றினை நகரசபை உறுப்பினரிடம் இன்று(11) கையளித்துள்ளனர்.

இது குறித்துத் தெரிவித்த நகரசபை உறுப்பினர், இவ்வருட பாதீட்டில் இருபது இலட்சம் ரூபா இவ்வீதியை தற்காலிகமாகப் புனரமைப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தைப்பொங்கல் முடிய இதன் புனரமைப்புப்பணிகள் ஆரம்பிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.