மஹிந்தவுக்கு அனுமதி!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாடு செல்ல கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த வருடம் காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு செல்ல அனுமதிகோரி அவரது சட்டத்தரணியினால் மனுவொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையான 10 நாட்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.