தமிழ்க்கட்சிகள் சேர்ந்திருந்து தமிழ் மக்களுக்கு என்னத்தைச் செய்தவர்கள்? அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெய சரவண கேள்வி!!!
தமிழ்க்கட்சிகள் கடந்த 20 வருடமாக ஒன்றாக இருந்து தமிழ் மக்களுக்கு என்னத்தைச் செய்தவர்கள் தற்போது இவர்கள் பிரிந்துவிட்டால் எங்களுடைய வாழ்க்கை இழந்து போய்விட்டதாக பேசுகின்றார்கள் ஒன்றாக இருந்து தங்கள் தங்களுடைய குடும்பங்களையும் சொந்த பந்தங்களையும் வளர்த்ததைத்தவிர தமிழ் மக்களுக்கோ தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கோ என்ன நடைபெற்றுள்ளது இவ்வாறு இன்று வவுனியா விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட தமிழர் ஐக்கிய முன்னணியின் உப தலைவரும் அம்மான் படையணியின் தலைமை ஒருகிணைப்பபளருமான ஜெயா சரவண கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துரைக்கையில், மாவீரத்தினம் வந்ததும் மண்வெட்டியைத் தூக்கி வைத்துக்கொண்டு வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றுக்கொள்வதைத்தவிர வேறு என்னத்தை செய்தவர்கள் இனியும் ஒன்றும் நடைபெறப்போவதில்லை பிரிந்து செல்வது நல்லது பிரிவதால் எமக்கு ஒரு கவலையும் இல்லை. அம்மான் படையணி என்பது சமூகச்சீரழிவுகளை தவிர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட படையணி போதவஸ்துக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக குரல் எழுப்பிப் பேராடிவருகின்றோம். எமது தவைரிடமிருந்து அழைப்பு ஒன்று கிடைத்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு அதற்கான செயற்பாடுகளை முன் னெடுத்துக்கொண்டு வடமாகாணத்திற்கு தலைவரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளேன். எமது சிறார்களை காப்பாற்ற நாங்கள் எடுத்த நடவடிகையினால் பல கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றி விசேட அதிரடிப்படையிடம் ஒப்படைத்திருக்கின்றோம் வடபகுதியில் எமது இளைஞர்களினால் பல கோடி பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றது.
அதேபோல பாடசாலைகளில் எமது படையணியின் இளைஞர்களினால் கைப்பற்றப்படும் போதைப் பொருட்கள் படையினரிடம் ஒப்படைத்துச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இளைஞர் யுவதிகளுக்கு விழிப்புணர்வு செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றறோம். இவை அனைத்தும் ஒரு மூன்று மாதகாலப்பகுதியில் இடம்பெற்று வருகின்றன. இச் செயற்பாடுகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்ளும்போது பல இளைஞர்கள் எங்களுடன் இணைந்து அதன் தாக்கம் வீச்சு அதிகமாக இருக்கும் எனவே எங்கருடன் இணைந்து பணியாற்று அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எதிர்வரும் தேர்தலில் நாங்கள் போட்டியிடவுள்ளதால் இளைஞர்கள் யுவதிகள் முன்னாள் போராளிகள் எங்களுடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறு மேலும் தெரிவித்துள்ளார்.