உயர் நீதிமன்றம் சென்ற ரஞ்சித் மத்தும பண்டார!
பொது நிர்வாக அமைச்சர் செயலாளர் இவ்வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய கட்டுப்பணம் ஏற்றுக்கொள்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு குறிப்பிட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கடிதத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவின் பிரதிவாதிகளாக அமைச்சரவை செயலாளர், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா, நாடளாவிய ரீதியில் அனைத்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் உட்பட 85 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.