வெளியானது இளவரசர் ஹரியின் நூல் – ஒரே நாளில் 400,000க்கும் அதிகமான பிரதிநிதிகள் விற்பனை!!
இளவரசர் ஹரியின் வாழ்க்கை வரலாற்று நூல் இதுவரை 4இலட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹரியின் ஸ்பெயர் நூல் வெளியிட்டாளர் இதனை தெரிவித்துள்ளதுடன் உலகில் அதிகவேகமாக விற்பனையான புனைகதை இல்லாத நூல் இதுவென குறிப்பிட்டுள்ளார்.
நேற்று ஸ்பெயர் வெளியாகியுள்ள நிலையில் 40000 பிரதிகள் வெவ்வேறு வடிவங்களில் விற்பனையாகியுள்ளன என டிரான்ஸ்வேர்ல்ட் பென்குயின் ரன்டம் ஹவுஸ் தெரிவித்துள்ளது.
இந்த நூல் மிகவேகமாக விற்பனையாகும் என எங்களிற்கு தெரியும் ஆனால் விற்பனை எங்களின் எதிர்பார்ப்பை மீறியுள்ளது என டிரான்ஸ்வேர்ல்ட் பென்குயின் ரன்டம் ஹவுஸ்அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நூல் வெளியாகிய முதல் நாளில் அதிக விற்பனையாகி நூல்களில் முன்னணியில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 416 பக்க நினைவுக்குறிப்பு பிரிட்டிஸ்அரச குடும்பத்தின் உள்வாழ்க்கையை பற்றி பல விடயங்களை தெரிவித்துள்ளதன் மூலம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.
இளவரசர் ஹரி அரசகுடும்பத்தின் கதையை வெளிப்படையாக அசைக்க முடியாத நேர்மையுடன் தெரிவிக்கின்றார் என நூல் வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சியிலிருந்து குணமடைதல் வரை அவர் தனது வாழ்க்கையை விபரித்துள்ளார்.
மன்னர் சார்ல்ஸ் தனது வாழ்க்கையின் இறுதி காலத்தை துன்பம் மிகுந்ததாக மாற்றவேண்டாம் என தனது பிள்ளைகளிடம் கேட்டுக்கொண்டார் என அந்த நூலில் ஹரி தெரிவித்துள்ளார்.