நிர்மலா சீதாராமனை சந்தித்தார் செந்தில் !!
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில் இலங்கையின் பொருளாதார விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், இந்தியா வழங்கிய உதவிகளுக்கு இதன்போது செந்தில் தொண்டமான் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
அத்துடன், மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, மறைந்த தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் வரலாறு புத்தகத்தை இ.தொ.கா சார்பில் செந்தில் தொண்டமான் இந்திய நிதி அமைச்சருக்கு வழங்கி வைத்துள்ளார்.