அதிவேக நெடுஞ்சாலையில் கோலா செல்வதற்காக வாகனங்களை நிறுத்தி உதவிய நபர் !!
விக்டோரியாவில் அதிகளவு வாகனங்கள் பயணிக்கும் அதிவேக நெடுஞ்சாலையில் ; தனது உயிரை பணயம் வைத்து கோலாவை பாதுகாப்பாக வீதியின் மறுபக்கத்திற்கு அழைத்து சென்ற குயின்ஸ்லாந்து நபரின் வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கோல்ட்கோஸ்டில் உள்ள பேர்லெய்க் ஹெட்ஸ் நெடுஞ்சாலையில் கோலாவொன்று வீதியை கடக்க முயல்வதை வில்தொர்ன்டொன் ( 39)அவதானித்துள்ளார்.
நானும் மனைவியும் வீட்டின் பல்கனியில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தவேளை கோலா வீதியை கடக்க முயன்றதை கண்டோம் என அவர்தெரிவித்துள்ளார்.
மரங்களின் மத்தியிலிருந்து கோலா வந்ததை கண்டோம் அவர் கோல்ட்கோஸ்ட் நெடுஞ்சாலையை செல்ல முயன்றார் நான் உடனடியாக இறங்கி கோலாவை பின்தொடர்ந்தேன் – கோலா என்னை பார்ப்பதை தவிர்ப்பதற்காக அமைதியாக சற்று பின்னால் சென்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோலா எப்படியாவது வீதியை கடக்கவேண்டும் என்பதில் உறுதியாகயிருந்தது இதனால் வீதிப்போக்குவரத்தை நிறுத்தி உதவலாம் என நான் நினைத்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொர்ன்டொனின் உறவினர் ஒருவர் வெளியிட்ட வீடியோவில் கோலா வீதியை கடக்க முயல்வதையும் காலணி அணியாத தொர்ன்டொன் அது வீதியை கடக்க உதவுவதையும் காணமுடிகின்றது.
அவர் தனது கைகளை உயர்த்தி வாகனங்களை நிற்குமாறு சைகைசெய்கின்றார்,கோலாவை நோக்கியும் கைகளை காட்டுகின்றார்.
கார்களில் இருந்தவர்கள் புரிந்துணர்வுமிக்கவர்கள் நான் வீதிக்கு வந்ததும் அவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தினார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வீதியை நோக்கி சென்றார் பின்னர் சிறிது ஓய்வெடுத்தார் நெடுஞ்சாலையில் அது மும்முரமான நேரம் இது பகலில் இடம்பெற்றது அதிஸ்டகரமான விடயம் எங்களால் உதவ முடிந்தது எனவும் தொர்ன்டொன் தெரிவித்துள்ளார்.