;
Athirady Tamil News

கட்டுமான தொழிலாளர்கள் சட்ட முன்முடிவு- அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்தார் !!

0

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்டசபையில் இன்று சட்ட முன்முடிவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:- 1984-ம் ஆண்டு தமிழ்நாடு கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் சட்டமானது (தமிழ்நாடு சட்டம் 29/1986), கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு மற்றும் பணி நிபந்தனைகளை ஒழுங்குபடுத்தவும் அவர்களின் பாதுகாப்பு உடல்நலம் அதனுடன் தொடர்புடைய பிற பொருட்படுத்துவதற்காகவும் இயற்றப்பட்டது. இந்த சட்டமானது இதுநாள் வரை நடைமுறைக்கு வரவில்லை.

இதற்கிடையில் மைய அரசானது 1996-ம் ஆண்டு கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு முறைப்படுத்தல் மற்றும் பணி நிபந்தனைகள் சட்டத்தினை (மைய சட்டம் 27/1996) இயற்றியுள்ளது. இதன் விளைவாக கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் வழக்கொழிந்து தேவையற்றதாகிவிட்டது. எனவே அரசானது கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 29/1986-ஐ நீக்களவு செய்வது என முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிவானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்படிவம் கொடுக்க விழைகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.