இம்ரான் கான் கைது?
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டு தேர்தல் ஆணையம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் தலைமை தேர்தல் ஆணையரை இம்ரான் கான் அண்மையில் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர் எந்த நேரம் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.