கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உயிரிழந்தமைக்கான காரணம்!!
நாரஹேன்பிட்டி தொழிற்பயிற்சி அதிகார சபையின் உதவி முகாமையாளரின் மரணம் ஆயுதங்களால் தாக்கப்பட்டதன் காரணமாக உள்ளக இரத்தப்போக்கு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மாளிகாகந்த நீதவான் வழங்கிய உத்தரவின் பிரகாரம் நிபுணத்துவ சட்ட வைத்தியர் அஜித் தென்னகோனினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் பின்னர் இது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த ஹிக்கடுவ தெல்வத்த பகுதியைச் சேர்ந்த ஏ. ஜி. எஸ். பிரீத்தி குமார என்ற 41 வயதுடைய நபராவார்.
இறந்தவரின் உடலில் 30 க்கும் மேற்பட்ட உள்ளக காயங்கள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் உயிரிழந்த உதவி முகாமையாளர் தொழில் பயிற்சி அதிகாரசபை அருகே கைது செய்யப்பட்டார்.
பின்னர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அவரை மருதானை பொலிஸ் படைமுகாமிற்கு அருகில் அழைத்துச் சென்ற போது, அருகில் இருந்த கண்ணாடி போத்தலை உடைத்து, கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார்.
இதன்போது பொலிஸ் அதிகாரிகளின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த உதவி முகாமையாளர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.