நாட்டுக்கு புதிய அபிவிருத்தி செயன்முறை தேவை!!
இரு உள்நாட்டு யுத்தங்களுக்கு மத்தியில் நாட்டைப் பொறுப்பேற்ற ரணசிங்க பிரேமதாஸ, எந்தச் சூழலையும் பொருட்படுத்தாமல் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று உறுதியாக நம்பினார் எனவும், இதன் காரணமாக நாட்டில் ஒரு குறிப்பிட்ட அளவிலான பொருளாதார ஸ்திரத்தன்மையை பேண முடிந்ததாகவும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வறுமை ஒழிப்பு, சமூகப் பாதுகாப்பு போன்றவற்றின் மூலம் நாட்டை நிலையான கட்டத்திற்குக் கொண்டு வந்தார் எனவும், இன்று பாடசாலை கட்டமைப்பை கட்டியெழுப்ப தான் செயல்படும் போது, வெறுமனே பகிர்ந்தளித்துச் செல்வதாக சிலர் குற்றம் சுமத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
நகரம், கிராமம் என இரண்டிற்கும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், அது கல்வியை இலக்காக் கொண்டதாக அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் பிறந்தநாள் இன்றாகும் என்பதுடன்,முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் தனது பிறந்தநாளுக்காக கம்உதாவ ஊடாக 12 நாள் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொண்டதையும் இங்கு நினைவு கூர்ந்தார்.
நாட்டுக்கு புதிய அபிவிருத்தி செயன்முறை தேவை எனவும், பாரம்பரிய முறைகளில் இருந்து விலகி அதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
பிரபஞ்சம் வேலைத்திட்டம் C.W.W.W கன்னங்கரவின் இலவசக் கல்விக் கொள்கையை வலுப்படுத்த உதவும் எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே, இதற்கு தீர்வொன்றை வழங்கும் வகையில் பிரபஞ்சம் ஊடாக பாடசாலைகளுக்கு பஸ் வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறான செயற்பாடுகளை கூட சிலர் விமர்சிப்பதாகவும் தெரிவித்தார்.
‘பிரபஞ்சம்’ வேலைத் திட்டத்தின் கீழ் 69 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம் (5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்று புத்தல, துடுகெமுனு மத்திய கல்லூரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (12) அன்பளிப்புச் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.