முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தொழில்முயற்சியாளர்களுக்கும் Business board நிறுவனத்திற்கும்இடையிலான சந்திப்பு!! (PHOTOS)
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தொழில்முயற்சியாளர்களுக்கும் Business board நிறுவனத்திற்கும்இடையிலான சந்திப்பு நேற்றையதினம் (12)முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது உள்ளூர் வணிகங்களை இணையமாக்குவதன் மூலம் எவ்வாறு வியாபாரத்தைமேம்படுத்த முடியும் என்றும், சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவெளிச்சந்தையை உருவாக்கி எதிர்காலத்தில் வருமானத்தை எவ்வாறு அதிகரிக்க முடியும் என்றவிடயங்கள் தொடர்பில் BusinessBoard பணிப்பாளர் சுஜன் அவர்கள் முயற்சியாளர்களுக்குவிரிவாக தெளிவுபடுத்தினார்.
அதுமட்டுமன்றி,
“வடக்கு- கிழக்கு தொழில் முயற்சியாளர்களை இணைப்பதே எமது நோக்கமாகும். தற்போது
கிளிநொச்சி மாவட்ட பதிவுகள் நிறைவுபெற்றுள்ளதுடன், முல்லைத்தீவை தொடர்ந்து வவுனியா,மன்னார் ,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள தொழில்முயற்சியாளர்களை இணைக்கதிட்டமிட்டுள்ளோம். இதனைத்தொடர்ந்து வெளிநாட்டு உற்பத்தியாளர்களை பதிவுசெய்தல் , பின்னர் இந்த இரு உற்பத்தியாளர்களையும்இணைப்பதே எமது சவாலாகும் “என்று BB பணிபாளர் சுஜன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், மாவட்ட அரசாங்க அதிபரினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில்கலந்துகொண்டு உலக உணவுத்திட்ட உதவி திட்ட பணிப்பாளர் திருமதி ஜெயபவானி கணேசமூர்த்தி தெரிவிக்கையில்,
வறுமையில் இரண்டாவது இடமாகவுள்ள எமது முல்லைத்தீவு மாவட்டத்தில் BB நிறுவனத்தின் கைத்தொழில் முயற்சியாளர்களுக்களுக்கான “இடையப்பதிவு” இந்த சிறந்த செயற்திட்டத்தின்மூலம் உள்ளூர் உற்பத்திகளை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து சந்தைப்படுத்துவதன் மூலம் எமதுமாவட்டத்தை வறுமை நிலையிலிருந்து மீண்டெழச்செய்யலாம் என்றும், இந்த இலவச சேவைநோக்கிற்காக BusinessBoard பணிப்பாளருக்கு நன்றியினையும் தெரிவித்தார்.
மேலும், இந்த சந்திப்பின் போது தொழில்முயற்சியாளர்கள் , கைத்தொழிலாளர்கள் , வியாபாரநிறுவனங்களை நடாத்துபவர்கள் கலந்துகொண்டு தமக்கான சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள்அவை தொடர்பான சந்தேகங்களை கேட்டறிந்துகொண்டதுடன் தாமாக முன்வந்து அவர்களது வியாபார நிறுவனங்களை Business Board இணையத்தில் பதிவுசெய்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் , Business Board இணையப்பதிவின் மூலம் சர்வதேச சந்தைகளை கண்டறியும்இத்திட்டம் தமக்கு ஒரு உந்துசக்தியாக அமையும் என்று கூறியதோடு BB இன் நேரடி செயற்பாடுகுறித்து தமது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் Business Board பணிப்பாளர் , முல்லை கைத்தொழில் பேரவை தலைவர் , மாவட்ட சிறுதொழில் அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள் , விதாதா அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.