அமெரிக்காவில் விமான சேவை முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியது!!!
அமெரிக்காவில் பயணிகள் விமான சேவை கட்டுப்பாட்டு மையமாக உள்ள மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பின் கம்ப்யூட்டர் சர்வரில் நேற்று முன்தினம் திடீரென்று பழுது ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
விமானங்கள் அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். நீண்ட முயற்சிக்கு பிறகு சர்வரில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது. இதையடுத்து விமான சேவை படிப்படியாக தொடங்கியது.
இதனால் 5,400 விமானங்கள் தாமதமாக வந்தடைந்தன. இந்த நிலையில் அமெரிக்கா முழுவதும் விமான சேவை முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கம் போல் விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.