;
Athirady Tamil News

டைட்டானிக் விபத்து வரலாறு: 110 ஆண்டுகளுக்குப் பிறகும் நீடிக்கும் நான்கு மர்மங்கள் !!

0

சரியாக 110 ஆண்டுகளுக்கு முன்பு, டைட்டானிக் கப்பல் ஒரு இருண்ட இரவில் பனிப்பாறையின் மீது மோதியது. அப்போது பெரும்பாலான பயணிகள் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தார்கள்.
விபத்து நேரிட்டபோது டைட்டானிக் கப்பல் இங்கிலாந்தின் செளத்தாம்ப்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு மணிக்கு 41 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 மற்றும் 15 ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் டைட்டானிக் மூன்றே மணிநேரத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது.

மூழ்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்ட கப்பல் மூழ்கியது. இந்த விபத்தில் சுமார் 1500 பேர் உயிரிழந்தனர். 110 ஆண்டுகள் கடந்த பின்னரும் இது மிகப்பெரிய கடல் விபத்தாக கருதப்படுகிறது.

விபத்து நடந்த இடத்திலிருந்து 1985 செப்டம்பரில் எச்சங்கள் அகற்றப்பட்டன. விபத்துக்குப் பிறகு, கனடாவிலிருந்து 650 கிலோமீட்டர் தொலைவில் 3,843 மீட்டர் ஆழத்தில் கப்பல் இரண்டாக உடைந்தது. மேலும் இரண்டு பகுதிகளும் ஒன்றோடொன்று 800 மீட்டர் தொலைவில் இருந்தன. இந்த விபத்து நடந்து 110 ஆண்டுகள் ஆன பிறகும் இந்த விபத்து குறித்து சில மர்மங்கள் நீடிக்கின்றன. பிபிசி நியூஸ் பிரேசில், சில நிபுணர்களிடம் பேசி இந்த மர்மங்களுக்கு விடை காண முயற்சித்தது.

1. ‘இந்த கப்பல் மூழ்க வாய்ப்பே இல்லை’
இந்தப் பெரிய கப்பலைப் பற்றி விவரிக்கும்போது, இது மூழ்கவே மூழ்காது. கடவுளால் கூட இதை மூழ்கடிக்க முடியாது என்று கூறப்பட்டது. இந்த நம்பிக்கைக்கு பல காரணங்களும் இருந்தன.

ரியோ டி ஜெனிரியோவின் ஃபெடரல் பல்கலைக்கழகத்தின் கடற்படை மற்றும் கடல் பொறியியல் துறையின் பேராசிரியரும் பொறியாளருமான அலெக்சாண்டர் டி பின்ஹோ அல்ஹோ இவ்வாறு கூறுகிறார். “பொறியியல் அடிப்படையில் பார்த்தால், இந்த வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட முதல் கப்பல் இது. இதில் பல நீர்ப்புகா கம்பார்ட்மென்ட்டுகள் கட்டப்பட்டன. அதாவது, கப்பலின் ஒரு அறையில் தண்ணீர் நிரம்பினாலும், அது மற்ற அறையை மூழ்கடிக்க முடியாது.”

இந்தக் கப்பலை கட்டும்போது சில சிரமங்கள் ஏற்பட்டன. மின்சார கம்பிகள் மற்றும் தண்ணீர் குழாய்கள் சரியாக வேலை செய்ய வேண்டுமென்றால், கப்பலின் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று நிறைய விவாதங்கள் நடந்தன.
“இதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் கப்பலின் உயரத்தை தீர்மானித்தனர். வெள்ளம் ஏற்பட்டாலும், கூரையின் உயரத்திற்கு தண்ணீர் வராது என்று அவர்கள் மதிப்பிட்டனர். அவர்கள் கூரையிலும் பாதுகாப்பான கம்பார்ட்மெண்ட்டுகளை கட்டினர்,” என்று பேராசிரியர் அல்ஹோ தெரிவித்தார். ஆனால் அந்த நேரத்தில் யாருமே பனிப்பாறை மீது கப்பல் மோதக்கூடும் என்பது பற்றி நினைத்திருக்க மாட்டார்கள்.
“கப்பல் பனிப்பாறையில் மோதியபோது, அதன் தாக்கம் மிகவும் வலுவாக இருந்தது. கப்பலின் பிரதான பகுதியில் பாதி நீளத்திற்கு ஒரு துளை ஏற்பட்டது. அத்தகைய சூழ்நிலையில் தண்ணீர் கூரையை அடைந்தது” என்று பேராசிரியர் அல்ஹோ குறிப்பிட்டார்.

“கப்பல் முழுவதிலும் தண்ணீர் நிரம்ப தொடங்கியது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மீட்பு என்பது சாத்தியமில்லை. நீரை அகற்ற எல்லா பம்ப்களையும் இயக்கலாம், எல்லா வழிகளிலும் முயற்சி செய்யலாம். ஆனால் தண்ணீர் உள்ளே வரும் வேகத்தில், அதை வெளியே எடுக்க முடியாது.”
கப்பல் கட்டுமானத்தில் பணிபுரிபவரும், நேவிகேட்டர் சிவில் இன்ஜினியருமான தியரி, “டைட்டானிக் மூழ்கவே மூழ்காது என்று விளம்பரப்படுத்தப்பட்டது. தண்ணீர் புகாத சுவர்களால் ஆன பல நிலவறைகள் கட்டப்பட்டதே இதற்குக் காரணம். இரண்டு வரிசையில் உள்ள நிலவறைகளில் தண்ணீர் புகுந்தாலும் கப்பல் மூழ்காது. ஆனால் பனிப்பாறையுடன் மோதியதால் கப்பலுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டது மற்றும் நீர்ப்புகா பெட்டிகளின் பல சுவர்கள் சேதமடைந்தன,” என்று குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.