அணுக்கசிவினால் பாதிக்கப்பட்ட புகுஷிமா உலையிலிருந்து ஒரு மில்லியன் தொன் சுத்திகரிக்கப்பட்ட நீரை விடுவிப்பதற்கு ஜப்பான் திட்டம்!!
அணுக்கசிவினால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு மின் ஆலையிலிருந்து, ஒரு மில்லியன் மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட நீரை சமுத்திரத்தில் விடுவிக்கும் நடவடிக்கை இவ்வருடம் ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பானிய அரச அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தள்ளார்.
2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தையடுத்து. சுனாமி அலைகள் புகுஷிமா அணு மின் நிலைய உலைகளையும் தாக்கின. இதனால், அணு உலைகளை குளிர்விக்கும் கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு அணுக்கசிவும் ஏற்பட்டது.
1984 ஆம் ஆண்டின் செர்னோபில் அணுசக்தி நிலைய விபத்துக்கு பின்னர் ஏற்பட்ட மிக மோசமான அணுசக்தி நிலைய விபத்து இதுவாகும்.
இம்மின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட 10 லட்சத்துக்கும் அதிகான நீரை சமுத்திரத்தில் விடுவிக்கப்பதற்கு ஜப்பான் திட்டமிட்டுள்ளது.
இதற்கு சர்வதேச அணுசக்தி முகவரகமும் அனுமதி அளித்துள்ளது. எனினும், இம்முகவரகத்திடமிருந்து விரிவான அறிக்கையொன்று கிடைக்கும் வரை ஜப்பானிய அரசாங்கம் காத்திருக்கும் என சஜப்பானிய அமைச்சரவை செயலாளர் ஹிரோகஸு மெட்சுனோ தெரிவித்துள்ளார்.