நல்லூர் முருகன் சனசமூக நிலையத்தின் உணவு வங்கி மூலம் பொங்கல் பொதிகள் வழங்கல்!! (PHOTOS)
ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக, உணவு பரிமாற்றச் சங்கங்கள் பிரதேச செயலக ரீதியாக அமைக்கப்பட்டு வருகின்றன. உணவு வங்கி அல்லது உணவுப் பரிமாற்றம் என்பதன் குறிக்கோள்களில் ஒன்றாக உணவுப் பற்றாக்குறையான குடும்பங்களுக்கு அதாவது நலிந்த குடும்பங்களுக்கும் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கும் உணவுகளை பகிர்ந்து வழங்குதலுமாகும்.
அந்தவகையில் நல்லூர் பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலுக்கு அமைவாக, ஜே108 கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள செட்டித்தெருவில் இயங்கும் நல்லூர் முருகன் சனசமூக நிலையத்தில் உணவுப் பரிமாற்றச் சங்கம் ( உணவு வங்கி ) அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் தலைவராக இ. இராகினி, செயலாளராக ச. லோகசிவம், பொருளாளராக கி.கௌசல்யா முகாமையாளராக வி. சங்கரப்பிள்ளை உட்பட 13 பேர் அடங்கிய உறுப்பினர்களைக்கொண்டு சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ர.யசோதினி, கிராம அலுவலர் ஜெ.லினேஸ், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ம. உதயசங்கர் ஆகியோர்கள் ஆலோசகர்களாகவும் உள்ளார்கள்.
சங்கத்தின் முதலாவது செயற்றிட்டத்தினூடாக அமரர் அபிராமிப்பிள்ளை சங்கரப்பிள்ளை ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தின் நிதி உதவியுடன் அண்மையில் தலா 3,000 ரூபா பெறுமதியான 25 பொங்கல் பொதிகள் பொருளாதாரரீதியாக நலிவுற்ற குடும்பங்களுக்கு நல்லூர் பிரதேச செயலாளர் எழிலரசி அன்ரன் யோகநாயகம் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் உணவு வங்கி தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.