;
Athirady Tamil News

ஐரோப்பாவை விரைவில் ஒமைக்ரான் மாறுபாடு தாக்கும்- நிபுணர்கள் எச்சரிக்கை!!

0

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு வைரஸ் கட்டுக்குள் வந்தாலும் பல நாடுகளில் பாதிப்பு தொடர்ந்தபடியே உள்ளது. அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் இருந்து வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடான எக்ஸ்.பி.பி.1.5 வைரஸ் பரவி வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 27 சதவீதம் பேர் ஒமைக்ரான் மாறுபாட்டுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்த எக்ஸ்.பி.பி.1.5 வைரஸ் மாறுபாடு 38 நாடுகளில் பரவி உள்ளது. இங்கிலாந்து, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளிலும் பரவி இருக்கிறது.

இந்த நிலையில் ஐரோப்பாவில் ஒமைக்ரான் மாறுபாடு விரைவில் அதிகளவு பரவி பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கூறியதாவது:- அமெரிக்காவில் கொரோனா பாதிப்பில் எக்ஸ்.பி.பி.1.5 வைரஸ் தொற்று பாதிப்பு 25 சதவீதத்துக்கு மேல் உள்ளது. இந்த வைரஸ் இன்று வரை மிகவும் வேகமாக பரவக்கூடியதாக உள்ளது. இந்த ஒமைக்ரான் மாறுபாடு ஐரோப்பாவில் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு உள்ளது.

இந்த மாறுபாட்டுடன் தொடர்புடைய ஆபத்து குறைவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் முதியவர்கள், தடுப்பூசி போடாத, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுள்ளவர்கள் போன்று பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு ஆபத்து மிதமானது முதல் அதிகமானது வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.