சுவிஸ் ராசமாணிக்கம் ரவீந்திரன் நிதியுதவியில் நெடுந்தீவில் பொங்கல்பொதிகள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி, சமூக நலம் , பண்பாடு, அறப்பணிமையத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்தி சுவிஸ் சுரேஷ் அவர்களின் ஊடாக
சூழகம் அமைப்பின் செயலாளர் திரு . கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு மண்ணின் மைந்தரும் சுவிஸ் சாயி ரேடர்ஸ் உரிமையாளருமான ராசமாணிக்கம் ரவீந்திரன் அவர்களின் நிதி அனுசரணையில் நெடுந்தீவு மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சேர்ந்த 50 குடும்பங்களுக்கு நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி முருகன் ஆலய முன்றலில் பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வு 13 -01 – 2023 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
எழுத்தாளர் வி.ருத்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திரு.கருணாகரன் நாவலன் , நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி முருகன் தேவஸ்தான செயலாளர் உதயகுமார் மதுவண்ணன் , ஓய்வுபெற்ற கிராமசேவகர்களான கோ.சண்முகலிங்கம் , ப.கதிரேசன் உட்பட பலரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பொதிகளை வழங்கிவைத்தனர் .
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.