லண்டன் சென்ற பார்சலில் யுரேனியம் இருந்ததற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை – பாகிஸ்தான் அரசு மறுப்பு!!
லண்டன் ஹீத்ரு விமான நிலையத்துக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி வந்த ஓமன் ஏர் விமானத்தின் உடமைகள் சோதனையிடப்பட்டன. அப்போது, யுரேனியம் தடவிய சரக்கு பெட்டகத்தை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து, இங்கிலாந்தின் காவல் துறை, தீவிரவாத எதிர்ப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்தது. அவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கராச்சியில் இருந்து வந்ததா?: இதுகுறித்து சன் நாளிதழ், இந்த கதிர்வீச்சுள்ள யுரேனிய பார்சல் காரச்சியில் இருந்து வந்ததாகவும், இங்கிலாந்தை சேர்ந்த ஈரானிய நாட்டவருக்கு பார்சல் அனுப்பப்பட்டதாகவும் முதன்முதலில் செய்தி வெளியிட்டது.