உண்டியல் குலுக்கவா: மைத்திரி கேள்வி!!
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 10 கோடி ரூபாயை நட்டஈடாக வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த தொகையை செலுத்துவதற்கு என்னிடம் சொத்து இல்லை. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தலை வணங்குகின்றேன். எனினும், அந்த நட்டஈட்டு தொகையை திரட்டுவதற்கு புறக்கோட்டையில் உள்ள அரச மரத்தடியில் டின் ஒன்றை கையில் ஏந்திக்கொண்டு குலுக்கிக்கொண்டு இருக்க வேண்டுமா என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வியெழுப்பியுள்ளார்.
தன்னுடைய நண்பர்களிடமே இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ள அவர், நட்டஈட்டு தொகையை வழங்குவதற்கு தன்னிடம் பணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நிட்டம்புவ விளையாட்டு மைதானத்தில் இன்று (15) இடம்பெற்ற புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கும் வைபத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு, தனது நண்பர்களிடம் கேட்டுள்ளார்.