ரீயூனியன் தீவிற்குள் நுழைய முற்பட்ட 46 இலங்கையர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!!
சட்ட விரோதமாக கடல் மார்க்கமாக பயணித்து பிரான்ஸின் ரீயூனியன் தீவிற்குள் நுழைய முற்பட்ட 46 இலங்கையர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி, நீண்டநாள் மீன்பிடி படகு மூலம் நீர்கொழும் பிலிருந்து சென்றவர்கள் ரீயூனியன் தீவிற்குள் நுழைய முற் பட்டுள்ளனர்.
43 ஆண்கள், பெண்கள் இருவர், சிறுவன் ஒருவன் உள்ளிட்ட 46 பேர் கடந்த 24 ஆம் திகதி கைது செய்யப் பட்டனர். 13 முதல் 53 வயதிற்குட் பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் , மட்டக்களப்பு, சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
விமானம் மூலம் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட 46 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக் களத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர்.
தெஹிவளையை சேர்ந்த ஒருவரே இந்த ஆட்கடத்தலுடன் தொடர்பு பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. ஒருவரிட மிருந்து இரண்டு இலட்சம் ரூபா முதல் வெவ்வேறு தொகை பணம் அறவிடப் பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.