;
Athirady Tamil News

எந்த சவாலையும் சந்திக்க முப்படைகளும் தயார் – ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே உறுதி!!

0

முன்னாள் ராணுவத்தினர் தினம் ஜனவரி14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது முதல் முறை யாக கடந்த 2016-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. கடந்த 1953-ம்ஆண்டு ஜனவரி 14-ம் தேதிதான், இந்திய ராணுவத்தின் ஃபீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா ஓய்வு பெற்றார். இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் ராணுவத்தினர் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

இந்தாண்டு 7-வது முன்னாள் ராணுவத்தினர் தினத்தை டெல்லி, டேராடூன், சென்னை, சண்டிகர், புவனேஸ்வர், ஜூஹுன்ஜுனு, ஜலந்தர், பனாகர், மற்றும் மும்பை ஆகிய 9 இடங்களில் கொண்டாட முப்படைகளின் தலைமையகம் முடிவு செய்தது.

டெல்லியில் மானெக்க்ஷா மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, கடற்படை தளபதி அட்மிரல் ஹரி குமார், விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பேசுகையில், ‘‘இந்திய பாதுகாப்பு படைகள் அதிக திறன் வாய்ந்ததாகவும் உலகில் மிக சிறந்ததாகவும் உள்ளன. இதற்கு முன்னாள் ராணுவத்தினரின் வெல்லமுடியாத தைரியம் மற்றும் தியாகங்கள்தான் காரணம். இந்த உத்வேகத்தால், எந்த சவாலையும் சந்திக்கும் வலிமை மிக்க படையாக நமது முப்படைகளும் உள்ளன. அனைவருக்கும், மகர சங்கராந்தி, பொங்கல் மற்றும் பிஹூ வாழ்த்துகள்’’ என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.