காவலர்கள் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், தமிழ்நாடு முழுவதும் தை பொங்கல் விழா தமிழ்நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை கொண்டித்தோப்பு காவலர்கள் குடியிருப்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.
காவலர்கள் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய அவர், காவலர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுகைளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் துர்கா ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஸ்டாலின் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “நாம் அமைதியாகக் கொண்டாட திருவிழா- விடுமுறை நாட்களில் குடும்பங்களைப் பிரிந்து பணியாற்றும் காவலர்கள், தியாகத்தை மனமுவந்து ஏற்கும் அவர்தம் குடும்பத்தினர் என்றும் போற்றுதலுக்குரியவர்கள்! வெயில் மழை பாராமல் மக்களைக் காக்கும் காவல்துறையினரோடு, மண்ணைக் காக்கும் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களைக் காக்கும் காவலரை எந்நாளும் காப்போம்!” என குறிப்பிட்டுள்ளார்.