;
Athirady Tamil News

புதிதாக முதியோர் உதவித்தொகை-முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்!!

0

புதுவையில் முதியோர், ஆதரவற்றோர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 847 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, விண்ணப்பித்து நிலுவையில் உள்ள அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். இதன்படி ஜனவரி 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரை 16 ஆயிரத்து 769 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உதவி த்தொகை பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இம்மாதம் முதல் உதவித்தொகை பெற உள்ளனர். இதனால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 81 ஆயிரத்த 616 ஆக உயர்ந்துள்ளது. முதல்கட்டமாக தட்டாஞ்சாவடி, இந்திராநகர் தொகுதியில் புதிய பயனாளிகளுக்கு உதவித் தொகையை முதல்- அமைச்சர் ரங்கசாமி வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், அரசு செயலர் உதயகுமார், இயக்குனர் முத்துமீனா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.