அடுத்த பிரதமராகும் தகுதி மம்தா பானர்ஜிக்கு உள்ளது – அமர்த்யா சென் நம்பிக்கை!!
அடுத்த பிரதமராகும் தகுதி மம்தா பானர்ஜிக்கு உள்ளது என்று அமர்த்யா சென் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்யா சென், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க, மாநில கட்சிகள் முக்கிய பங்காற்ற வேண்டும். அடுத்த பிரதமராகும் திறன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உள்ளது.
அதேநேரத்தில், பாஜகவுக்கு எதிராக அதிருப்தியில் உள்ள மக்கள் சக்தியை ஒன்று திரட்ட முடியும் என்பதை அவர் இன்னும் நிரூபிக்கவில்லை. இதை அவர் சாத்தியமாக்க வேண்டும் என்றால், இந்தியாவில் பல கட்சிகள் தனித்தனியாக சிதறி கிடப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இன்று நாட்டில் பாஜகவுக்கு மாற்றாக வேறு அணி இல்லாதது வருத்தமாக உள்ளது. மாநில கட்சிகள் முக்கிய பங்காற்ற வேண்டும். திமுக, திரிணமூல், சமாஜ்வாதி கட்சிகள் முக்கிய மானவை. மற்றொருபுறம் காங் கிரஸ் பலவீனமான நிலையில் உள்ளது. அந்த கட்சியால் மட்டுமே அகில இந்திய தொலைநோக்கை அளிக்க முடியும். இவ்வாறு அமர்த்யா சென் கூறினார்.