மூடப்பட்ட ரூமில் விசாரணை.. அக்பரியை தூக்கில் தொங்கவிட்ட ஈரான்.. “காட்டுமிராண்டித்தனம்”.. எகிறிய ரிஷி!! (படங்கள்)
பிரிட்டன் குடியுரிமை பெற்ற தங்கள் நாட்டு பாதுகாப்புத் துறை முன்னாள் இணையமைச்சா் அலிரெஸா அக்பரிக்கு, ஈரான் அரசு தூக்கு தண்டனையை நிறைவேற்றி உள்ளது. அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.. இந்த ஹிஜாப் போராட்டக்காரர்களுக்கு தூக்கு தண்டனைகளை நிறைவேற்றியும் வருகிறது ஈரான் அரசு.
இதற்கு சர்வதேச நாடுகள் கண்டனங்களை தெரிவித்தும்கூட, ஈரான் எதையுமே காதில் வாங்கவில்லை.. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் கடவுளுக்கு எதிராக போர் தொடுத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியதுடன், தூக்கு தண்டனை விதிப்பிற்கும் காரணங்களை சொல்லி வருகிறது.
தூக்கு தண்டனை
ஈரானுனின் இந்த செயலுக்கு மனித உரிமைகள் அமைப்புகளும் கண்டனத்தை வருகின்றன.. போராட்டக்காரர்களில் 400 பேருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றாலும், இதுவரை எத்தனையோ பேரை தூக்கில் போட்டுள்ளது இந்த அரசு.. ஆனால், அதிகாரபூர்வ எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், ஒரு முன்னாள் ராணுவ அதிகாரிக்கு மரண தண்டனையை தந்து, இன்னொரு அதிர்ச்சியை தந்துள்ளது ஈரான்.. அவர் பெயர் அலிரெஸா அக்பரி.. கடந்த 2000-ம் முதல் 2008-ம் வரை துணை ராணுவ அமைச்சராக இருந்தவர்.. ஈரானில் பிறந்தவர்.. இங்கிலாந்திலும் குடியுரிமை பெற்றிருந்தார்..
டவுட் கிளம்பியது
கடந்த 2005-ல், நடந்த சா்ச்சைக்குரிய தேர்தலில் தீவிர நிலைப்பாட்டை கொண்ட மஹ்மூத் அஹமதிநிஜாத் அதிபராக தோந்தெடுக்கப்பட்டாா்.. இதையடுத்து, அக்பரி, தன்னுடைய துணை ராணுவ அமைச்சர் பதவியில் இருந்து விலகிவிட்டார்.. பிறகு, அடிக்கடி இங்கிலாந்துக்கு சென்று வந்தார்… இவர் எதற்காக இங்கிலாந்துக்கு அடிக்கடி போகிறார்? என்ற சந்தேகம் கிளம்பியது.. இங்கிலாந்துக்கு உளவு பார்ப்பதாக ஒருகட்டத்தில் இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.. குறிப்பாக, ஈரான் அணுசக்தி விஞ்ஞானி மொஷென் பக்ரிசாதே கடந்த 2020ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமே, அக்பரி அளித்த உளவு தகவல்தான் என்று ஈரான் அரசு குற்றம் சாட்டியது… அந்த குற்றச்சாட்டையும் வலுவாகவும் அது நம்பியது..
மூடப்பட்ட ரூம்
ஆனால் இந்த குற்றச்சாட்டை அக்பரி, கறாராக மறுத்திருந்தபோதிலும், இதே குற்றச்சாட்டுக்காக அக்பரி இறுதியில் கைது செய்யப்பட்டார்.. இந்த கைது நடவடிக்கைக்கு, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன.. அக்பரியை விடுதலை செய்யும்படியும் ஈரானை கேட்டுக் கொண்டன.. ஆனால் வழக்கம்போல், ஈரான் இதையும் பொருட்படுத்தவில்லை.. அக்பரி மீதான விசாரணையை தீவிரப்படுத்தியது.. அதிலும், நடத்தப்பட்ட விசாரணையானது, மிகவும் பரபரப்பாக அப்போது பேசப்பட்டது.. ஒரு மூடப்பட்ட ரூமுக்குள்தான் அக்பரியிடம் ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இறுதியில், அக்பரிக்கு மரண தண்டனை என்று ஈரான் கோர்ட்டு தீர்ப்பையும் சொல்லிவிட்டது..
வதந்திகள்
இந்த தண்டனைக்கு, சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன… அக்பரியை விடுவிக்குமாறு இங்கிலாந்து கேட்டுக் கொண்டும், அதை ஈரான் கண்டுகொள்ளவில்லை. இப்போது, அக்பரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதாக ஈரான் அறிவித்துள்ளது… ஈரான் நீதித்துறையின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் இதை உறுதிப்படுத்தி உள்ளது.. ஆனால் எப்போது இந்த தண்டனையை நிறைவேற்றினார்கள் என்பதுதான் தெரியவில்லை.. சில நாட்களுக்கு முன்னரே அவர் தூக்கிலிடப்பட்டதாக வதந்திகள் பரவின என்றாலும், அப்போது அது உறுதி செய்யப்படவில்லை.
சனிக்கிழமை
இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாலும், எப்போது தூக்கிலிடப்பட்டார் என்று தெரியவில்லை. கடந்த சனிக்கிழமை தூக்கிலிட்டப்பட்டுள்ளார் என்கிறார்கள்.. ஈரானின் இந்தச் செயலுக்கு பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.. அரசியல் போட்டியே இதற்கெல்லாம் காரணம் என்று சொல்லப்பட்டாலும், அக்பரியைத் தூக்கிலிட்டதன் மூலம், அந்நாட்டு அரசியலில் அலி ஷம்கனியின் வளா்ச்சியை கட்டுப்படுத்தவும், மட்டுப்படுத்தவும், ஆட்சியாளா்கள் முயன்றுள்ளதாக விமா்சகா்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இரட்டை குடியுரிமை
மரண தண்டனைகளை அதிகமாக தரும் நாடுகளில் ஈரானும் ஒன்று என்பதை மறுக்க முடியாது.. அதிலும், உளவுக் குற்றச்சாட்டின் பேரில் தூக்கு தண்டனை தருவதும், அந்நாட்டின் நடைமுறையில் இருந்து வரும் விஷயம்தான்.. ஆனாலும், பிரிட்டன் – ஈரான் என்று இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவரை, அதுவும் ஈரானின் முன்னாள் இணையமைச்சரையே மரண தண்டனைக்கு ஆளாக்கி இருப்பது இதுதான் முதல்முறை என்பதுதான் பல நாடுகளை அதிர வைத்து வருகிறது.