என்ன ட்ரெஸ் இது? வர்க்கலாவில் அலறிய வெளிநாட்டு பெண்.. சுற்றி நின்ற ஆண்கள்.. நடந்தது என்ன? (படங்கள்)
கேரள மாநிலம் வர்க்கலாவில் பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் உள்ளூர் நபரால் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் இருக்கும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்று வர்க்கலா. கடந்த 5-6 வருடங்களுக்கு முன்பெல்லாம் வர்க்கலா இவ்வளவு பெரிய சுற்றுலாத்தலமாக இல்லை.
ஆனால் கொரோனாவிற்கு பின் இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. முக்கியமாக வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
பயணிகள்
வர்க்கலா பிரபலம் அடைய காரணம், இந்த பகுதி அமைந்திருக்கும் விதம். கடல், கடலுக்கு அருகிலேயே இருக்கும் மேடான மலை போன்ற திட்டு பகுதி, அங்கே அமைந்து இருக்கும் ஹிப்பி கலாச்சார கடைகள் என்று மினி கோவா போல வர்க்கலா காணப்படும். இதனால் இந்தியர்களும் அதிக அளவில் வர்க்கலா செல்ல தொடங்கி உள்ளனர். அருகிலேயே இருக்கும் பேக் வாட்டர்ஸ் பகுதியும் இங்கே பயணிகள் குவிய காரணமாக உள்ளது. இந்த நிலையில் வர்க்கலாவில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.
வெளிநாடு
இங்கே வெளிநாட்டு பயணிகள் அடிக்கடி சூரிய குளியல் எடுப்பது வழக்கம். அதாவது பிகினி அணிந்து கொண்டு உடலில் சூரிய ஒளி மூலம் நிறம் மங்க வேண்டும் என்று சூரிய குளியல் எடுப்பது வழக்கம். பெண்கள் பலர் இங்கே பிகினி அணிந்து படுத்து கிடப்பது இயல்பாக நடக்கும் விஷயம்தான். இந்த நிலையில்தான் அங்கே பெண் வெளிநாட்டு பயணிகளை இளைஞர் ஒருவர் கடந்த சில மாதங்களாக தொல்லை செய்து வருவதாக கூறப்படுகிறது. பிகினி அணிந்து இருக்கும் பெண்களை தேடி தேடி அந்த நபர் தொல்லை செய்து வருவதாக கூறப்படுகிறது.
பிரான்ஸ்
இந்த நிலையில்தான் பிரான்ஸ் பயணி ஒருவர் அங்கே குளித்துக்கொண்டு இருக்கும் போது அந்த இளைஞரால் தொல்லைக்கு உள்ளாகி இருக்கிறார். அந்த இளைஞர் பிகினியில் இருக்கும் பெண்ணிடம் வந்து தொல்லை செய்துள்ளார். கையில் வைத்து இருந்த உடைந்த பியர் பாட்டிலை காட்டி.. உன்னை குத்திவிடுவேன். என்ன உடை இது? இப்படித்தான் உடை அணிவாயா ? போய் டிரெஸ் போட்டுக்கொள் என்று கடுமையாக மிரட்டி இருக்கிறார். இதையடுத்து அந்த பயணியும் என்ன செய்வது என்று தெரியாமல் அலறி இருக்கிறார். காப்பாற்றும்படி அந்த பயணி ஓ என்று அலறி உள்ளார். ஆனால் அந்த இளைஞர் தொடர்ந்து அந்த வெளிநாட்டு பயணியை மிரட்டி உள்ளார்.
அலறல்
இந்த சம்பவத்தை அங்கிருந்த ஆண்கள் சிலர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். பின்னர் அங்கே கடை வைத்திருக்கும் சிலர்தான் வந்து அந்த நபரை அங்கிருந்து அனுப்பி உள்ளனர். அந்த நபருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவர் கடந்த சில மாதங்களாகவே அங்கு இருக்கும் வெளிநாட்டு பெண்களை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவரை இன்னும் போலீசார் கைது செய்யவில்லை. பாதிக்கப்பட்ட பிரான்ஸ் பயணியும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் இன்னும் அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த சம்பவம் வர்க்கலா பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.