வட ஆப்பிரிக்காவில் விழுந்த விண்கல்! உள்ளே என்ன இருக்கு? அடுத்தடுத்த ஆய்வில் காத்திருந்த அதிர்ச்சி! (படங்கள்)
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் (Morocco) உள்ள டிசிண்ட் (Tissint) என்கிற ஒரு சிறிய நகரத்தில், விண்கல் ஒன்று விழுந்துள்ளது. அதை பத்திரமாக கைப்பற்றி ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகளுக்கு பல நம்ப முடியாத விஷயங்கள் காத்திருந்தது! அதென்ன விஷயங்கள்? அந்த விண்கல் எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? அதனுள் என்ன இருந்தது? இதோ விவரங்கள்:
முதல் கட்ட ஆய்வில் ஒன்றும் தெரியவில்லை.. அதன் பின்னர்?
சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு வட ஆப்ரிக்காவில் உள்ள மொராக்கோவில் விண்கல் ஒன்று விழுந்தது. முதல் கட்ட ஆய்வில் – அது செவ்வாய் கிரகத்தை சேர்ந்த பாறை (Mars Rock) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் வழியாக, அந்த செவ்வாய் கிரக பாறையானது தன்னுள் பல நம்ப முடியாத விஷயங்களை புதைத்து வைத்துள்ளது விஞ்ஞானிகளுக்கு தெரிய வந்துள்ளது!
அதனுள் அப்படி என்ன இருந்தது!
செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமியில் விழுந்த விண்கல் ஆனது தன்னுள் பல்வேறு வகையான கரிம சேர்மங்களை (Organic compounds) கொண்டுள்ளது. செவ்வாய் கிரக பாறைக்குள் புதைந்து இருந்த கரிம சேர்மங்கள் ஆனது செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்தனவா என்பதை பற்றிய உண்மையை அறிந்துகொள்ள உதவும் முக்கியமான ஆதாரமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அதுமட்டுமின்றி, இது நமது பூமியின் புவியியல் வரலாற்றை பற்றிய முக்கியமான தடயங்களையும் வழங்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது எப்படி உயிர்கள் இருந்ததற்கான ஆதாரத்தை வழங்கும்?
இந்த பாறைக்குள் கிடைத்ததாக கூறப்படும் கரிம சேர்மங்கள் ஆனது பெரிய மூலக்கூறுகள் (Large molecules ) ஆகும். அவைகள் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் மற்றும் சல்பரை கொண்டிருக்கின்றன. இவைகள் உயிர்கள் மற்றும் உயிரியல் செயல்முறைகளுடன் தொடர்புடையவைகள் ஆகும். ஆக, இந்த செவ்வாய் கிரக பாறையானது, அங்கே உயிர்கள் வாழ்ந்தனவா என்கிற கேள்விக்கான பதிலை அறிந்துகொள்ள வழிவகுக்கலாம்.
சில விஞ்ஞானிகள் “வேறு மாதிரி” சொல்கின்றனர்!
சில விஞ்ஞானிகள் செவ்வாய் கிரக பாறையில் கண்டறியப்பட்டுள்ள கரிம சேர்மங்களானது, உயிரியல் அல்லாத செயல்முறைகளாலும் கூட உருவாக்கப்படலாம் என்கின்றனர். விஞ்ஞானிகள் இதை “அபயோடிக் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி” (Abiotic organic chemistry) என்று அழைக்கிறார்கள். அதாவது செவ்வாய் கிரக பாதையில் இந்த கரிம சேர்மங்கள் இருப்பதை வைத்து மட்டுமே அங்கே உயிர்கள் இருந்தது ஏங்கிய முடிவுக்கு வர முடியாது என்கின்றனர். இந்த பாறை விண்வெளியில் வீசப்பட்டது எப்படி?
இந்த பாறை விண்வெளியில் வீசப்பட்டது எப்படி? விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த பாறை நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் உருவான பாறை ஆகும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நடந்த ஏதோவொரு மோதல் அல்லது வெடிப்பு சம்பவத்தின் விளைவாக இந்த பாறை விண்வெளியில் வீசப்பட்டுள்ளது; கடைசியாக அது பூமியில் வந்து விழுந்துள்ளது.
இது முதல் முறை அல்ல!
செவ்வாய் கிரகத்தை சேர்ந்த விண்கல் ஒன்று பூமியில் விழுவது இதுவொன்றும் முதல் முறை அல்ல. கடந்த 1962 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு வரையிலாக மொத்தம் 5 செவ்வாய் கிரக பாறைகள் பூமியில் விழுந்து உள்ளன. வட ஆப்ரிக்காவில் உள்ள மொராக்கோவில் விழுந்த செவ்வாய் கிரக பாறையானது பூமிக்கு வந்த 5-வது செவ்வாய் கிரக பாறை ஆகும். இது சரியாக 2011 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி அன்று மொராக்கோவில் விழுந்தது. இது டிசிண்ட் நகரத்தில் விழுந்ததால், விஞ்ஞானிகள் இதற்கு டிசிண்ட் (Tissint) என்றே பெயரிடப்பட்டு உள்ளனர்.
இது சற்றே வித்தியாசமான பாறையும் கூட!
இது சற்றே வித்தியாசமான பாறையும் கூட! இந்த செவ்வாய் கிரக பாறை கொஞ்சம் ஸ்பெஷல் ஆன பாறை ஆகும். ஏனென்றால் இந்த பாறையில், முன்னதாக கிடைத்த செவ்வாய் கிரக மாதிரிகளில் காணப்படாத ஏராளமான கரிம மெக்னீசியம் சேர்மங்கள் உள்ளன. இதன் மூலம் செவ்வாய் கிரகத்தின் உட்புறம் பற்றியை பல மர்மங்களுக்கு விடை கிடைக்கலாம். அதுமட்டுமல்ல! இந்த கண்டுபிடிப்பு செவ்வாய் கிரகத்தின் மேன்டில் (Mantle) மற்றும் மேலோடுக்கு (Crust) அடியில் என்னென்ன செயல்முறைகள் நடக்கின்றன? காலப்போக்கில் இந்த செயல்முறைகள் எவ்வாறு மாறியது? செவ்வாய் கிரக பாறைக்கும் தண்ணீருக்கும் இடையிலான தொடர்புகள் என்ன? என்பதையும் பற்றியும் அறிந்துகொள்ள உதவும்!