;
Athirady Tamil News

நேபாளத்தில் தொடரும் விமான விபத்துக்கள்!!

0

சீரற்ற வானிலையாலும், மோசமான நிலப்பரப்புகளுக்கு இடையே ஓடுதளப் பாதை அமைந்துள்ளதாலும் நேபாளத்தில் அடிக்கடி விமான விபத்துக்கள் ஏற்படுகிறது.

நேபாளத்தில் இதற்கு முன்பு நடந்த விமான விபத்துக்கள் வருமாறு:- * 2012-ம் ஆண்டு மே மாதம் 14-ந்தேதி, பொக்காராவில் இருந்து ஜோம்சோம் நோக்கி சென்ற விமானம் ஜோம்சோம் அருகே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 15 பேர் இறந்தனர். * 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருபுவன் சர்வதேச விமான முனையத்தில் சீத்தா ஏர் விமானம் அவசரமாக தரை இறங்கும்போது விழுந்து நொறுங்கியதில் 19 பேர் பலியானார்கள்.

* 2016-ம் ஆண்டு தாரா விமான நிறுவனத்தின் விமானம் முஸ்டாங் மாவட்டத்தில் விபத்தில் சிக்கியதில் பணியாளர்கள் உள்பட 23 பேர் பலியானார்கள். * 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா-பங்களா ஏர் விமானம் திருபுவன் சர்வதேச விமான நிலைய முனையத்தில் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் இருந்த 51 பேரும் பலியானார்கள். * 2022-ம் ஆண்டு மே மாதம் 29-ந்தேதி முஸ்டாங் மாவட்டத்தில் தாரா விமான நிறுவன விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 இந்தியர்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.