யாழில்.ஆதரவாளர்களை சந்தித்த ஜனாதிபதி ரணில் !! (படங்கள்)
யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற தேசிய பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்திற்கும் விஜயம் செய்திருந்தார்,
கந்தர்மடம் பலாலி வீதியில் உள்ள விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் கலாசார முறைப்படி ஆராத்தி எடுத்து வரவேற்றதோடு, இந்து குருமார்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களையும், ஆசிகளையும் வழங்கினர்.
அதனை தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்க யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்களுடன் கலந்துரையாடியதோடு எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலை திட்டங்கள் தொடர்பிலும் எடுத்துரைத்தார்.