காரைக்காலில் கார்னிவல் திருவிழா- குதிரை வண்டியில் ஊர்வலம் சென்ற புதுவை அமைச்சர்!!
காரைக்கால் கார்னிவல் திருவிழாவில் பல்வேறு கலைக்குழுவினர் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சாலையோர கலை நிகழ்ச்சி நடைபெற்றது. புதுவை மாநிலம் காரைக்காலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை சார்பில் காரைக்கால் கார்னிவல் திருவிழா நேற்று தொடங்கியது.
வருகிற 18-ந்தேதி வரை 4 நாட்கள் விழா நடைபெறுகிறது. நேற்று முதல் நாளில் சாலையோர கலை நிகழ்ச்சி நடந்தது. கலை நிகழ்ச்சியை புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ. நாஜீம் ஆகியோர் குதிரை வண்டியில் நகரை ஊர்வலமாக வந்தனர்.
கலை நிகழ்ச்சியில் பல்வேறு நடன குழுவினர் ஆதிவாசிகளின் கரகாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம் போன்றவை நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் முகமது மன்சூர், துறை கலெக்டர் ஆதர்ஷ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகஸ்வரன், மற்றும் பலர் பங்கேற்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.