;
Athirady Tamil News

இந்தியாவில் 40 சதவீதம் சொத்துக்கள் 1 சதவீத கோடீஸ்வரர்களிடம் உள்ளது- ஆய்வு அறிக்கையில் தகவல் !!

0

உலக பொருளாதார கூட்டமைப்பு ஆண்டுக் கூட்டத்தில் இங்கிலாந்தை சேர்ந்த ‘ஆக்ஸ்பேம் இண்டர்நேஷனல்’ அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்தியாவில் ஆண் தொழிலாளியின் சம்பளம் ஒரு ரூபாய் என்றால், பெண் தொழிலாளியின் சம்பளம் 63 பைசா என்ற அளவில் தான் உள்ளது. இந்தியாவில் பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2020-ல் 102 ஆக இருந்தது. இதுவே 2022-ல் 166 ஆக அதிகரித்துவிட்டது. நாட்டின் முதல் 100 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து 54.12 லட்சம் கோடியாக உள்ளது.

இதன் முலம் இந்தியாவின் 18 மாத பட்ஜெட் செலவை எதிர்கொள்ள முடியும். கோடீஸ்வரர்களுடன் ஒப்பிடும்போது ஏழைகள் தங்கள் வருமானத்தில் இருந்து அதிக வரி செலுத்துகின்றனர். முக்கியமாக அத்தியாவசியப் பொருள்கள், சேவைகளுக்காக வரி செலுத்துவது அதிகம் உள்ளது. இந்த நிலையை மாற்ற வரி விதிப்பு முறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்.

இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களில் ஒரு சதவீதம் பேரிடம் நாட்டின் ஒட்டுமொத்த செல்வ வளத்தில் 40 சதவீதம் குவிந்துள்ளது. வரி விதிப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளாவிட்டால் இது அதிகரிக்கவே செய்யும். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆவதும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதும் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.