மீண்டும் அணுமின் உற்பத்தி தென் கொரியா முடிவு!!
தென் கொரியா மீண்டும் அணு மின்சார உற்பத்திக்கு திரும்ப திட்டமிட்டுள்ளது என அந்தநாட்டின் அதிபர் தெரிவித்தார். தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் 4 நாள் பயணமாக ஐக்கிய அரசு எமிரேட்(யுஏஇ) சென்றுள்ளார். அவருக்கு எமிரேட் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பான வரவேற்பு அளித்தார்.
அப்போது யூன் சுக் யோல் பேசுகையில், ‘‘வரும் 2050ம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் வகையில் மீண்டும் அணு சக்திக்கு திரும்ப தென் கொரியா திட்டமிட்டுள்ளது’’ என்றார். யுஏஇயில் பாரக் என்ற இடத்தில் பிரமாண்டமான அணு மின் நிலையத்தை தென் கொரியா அமைத்து வருகிறது.
யுஏஇயில் தென் கொரியாவின் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய தென் கொரியா அதிபர்,‘‘யுஏஇ சகோதர நாடு. இது ஒரு வெளிநாடு அல்ல, நீங்கள் இருக்கும் யுஏஇ உங்கள் நாடு ஆகும்’’ என்றார்.