;
Athirady Tamil News

முஜிபுர் ரஹ்மானின் இடத்துக்கு ரவூப் ஹக்கீம் – சபாநாயகர் அறிவிப்பு!!

0

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அரசாங்க நிதி பற்றிய குழுவில் இருந்து இராஜினாமா செய்தமையின் காரணமாக அக் குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்குப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அக் குழுவில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (17) சபாநாயகரின் அறிவிப்பின்போதே இதனை அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அரசாங்க நிதி பற்றிய குழுவில் இருந்து இராஜினாமா செய்தமையின் காரணமாக அக் குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்குப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அக் குழுவில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம், 2023 ஜனவரி 13 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழு, அரசாங்க நிதி பற்றிய குழுவில் சேவையாற்ற பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமை பெயரிட்டுள்ளது என்பதை அறிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.