சபாநாயகர் தலைமையில் இன்று கலந்துரையாடல்!!
தேர்தலுக்கான செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டமூலத்தை நாளை (19) விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் இன்று சபாநாயகரின் தலைமையில் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியும் பங்கேற்கவுள்ளார்.
இதன்போது கட்சித் தலைவர்களின் ஒருமித்த இணக்கப்பாடு கிடைக்கும் பட்சத்தில் நாளை (19) இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்