சர்வதேச பொருளாதார வளர்ச்சியை தீர்மானிப்பதில் சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்குமா?: ரகுராம் ராஜன்!!
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேட்டி அளித்தார். அப்போது, சர்வதேச பொருளாதார வளர்ச்சியை தீர்மானிப்பதில் சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்குமா? என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது:- சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்குமா என்று இப்போதே சொல்ல முடியாது. ஏனென்றால், தற்போதைய நிலையில் இந்தியா மிகவும் சிறிய பொருளாதாரத்தை கொண்டது. இருப்பினும், அது உலக பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இருப்பதால், நிலைமை மாறலாம். இந்தியா வளர்ந்து வருகிறது.
மேலும் வளர வாய்ப்பு இருக்கிறது. சீன பொருளாதாரம் இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மீண்டு எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், சர்வதேச பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.