கேரளாவில் மாணவிகளுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுமுறை அளித்த பல்கலைக்கழகம்!!
கேரளாவில் உள்ள கொச்சி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள் மாதத்தில் மாதவிலக்கு நாட்களில் கல்லூரிக்கு விடுப்பு எடுத்து கொள்ள அனுமதி வழங்கி உள்ளது.
இதுபோல இப்போது கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் மாணவிகள் மாதவிலக்கு நாட்களில் வகுப்புக்கு விடுப்பு எடுத்து கொள்ளலாம் என அறிவித்து உள்ளது. கொச்சி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள் ஒரு பருவத்தில் 75 சதவீத வருகை பதிவு இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
மாணவிகளுக்கு மாதவிலக்கு விடுமுறை விடப்பட்டதால் தற்போது இங்கு 73 சதவீத வருகை பதிவு இருந்தாலும் தேர்வு எழுதலாம் என கூறப்பட்டுள்ளது. கொச்சி பல்கலைக்கழகத்தை தொடர்ந்து இப்போது கேரள தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திலும் மாணவிகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டதை கேரள உயர் கல்வி துறை மந்திரி பிந்து வரவேற்று உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, கேரளாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிடவேண்டும் என்றார்.