கஞ்சாவுடன் இருவர் கைது!!
நாட்டின் இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் கஞ்சாவுடன் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யாழ் காங்கேசன்துறை பிரதான வீதியின் இரண்டாம் பாலத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 34 கிலோ 50 கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது கைது செய்யப்பட்டவர் 18 வயதுடைய மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்
சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் தடுப்பு காவலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, வலான ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக யால வனப்பகுதியில் 3 இலக்கம் பகுதியில் ஒரு ஏக்கருக்கு அதிக பரப்பளவுடைய நிலப்பரப்பில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்த தோட்டமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதோடு கஞ்சா பொதிகளுடன் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 46 வயதுடைய பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.
இதன்போது 8,400 கஞ்சா செடிகள், 46 கிலோ 650 கிராம் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
கொனகங்ஹார பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.