40 ரூபாவுக்கு முட்டை வழங்குவோம் : மேல்மாகாண முட்டை உற்பத்தியாளர்கள்!
கோழிப் பண்ணைகளுக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கான வரியை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், ஒரு முட்டையை 40 ரூபாவுக்கு வழங்க முடியும் என மேல்மாகாண முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது.
டீசல், பெற்றோல், நெல், புண்ணாக்கு மற்றும் சோளம் போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதால், முட்டையின் விலையும் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் நிலேஷ் ரூபசிங்க தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில், சிலர் கமிஷன் பெறும் நோக்கில் வெளிநாடுகளிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அதிக முனைப்பு காட்டி வருவதாகவும் மேல் மாகாண முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
தற்போது, சந்தையில் முட்டைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பல்வேறு பகுதிகளிலும் முட்டையொன்று 55 ரூபாய் முதல், 64 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.