இலங்கை குறித்த அமெரிக்காவின் கருத்துக்கு சீனா எதிர்ப்பு!!
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு இன்னும் இணக்கமான தீர்வை வழங்குவதற்கு செயற்படாமல் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் குற்றம் சுமத்தியுள்ளது.
நிதி உத்தரவாதத்தை வழங்குவதில் சீனா தாமதம் செய்ததாக இந்நாட்டு அமெரிக்கத் தூதுவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கைக்கான சீனத் தூதரகம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கிறது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் பிபிசியிடம் தெரிவித்த கருத்து தொடர்பில் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் கடும் விமர்சன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் தொகையை பெற்றுக் கொள்வதற்கு இலங்கைக்கு சீனா பிரதான தடையாக இருப்பதாக அமெரிக்க தூதுவர் பிபிசி நிகழ்ச்சிக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.