ஹிஜாப் எதிர்ப்பாளர்களுக்கு தண்டனைகள் தொடரும்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி!!
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனை வழங்குவது தொடரும் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்து அரசால் கைதுசெய்யப்பட்ட 100 நபர்கள் துக்குத் தண்டனைக்கு உள்ளாக இருக்கிறார்கள் என ஈரானின் வலதுசாரி அமைப்புகள் விமர்சித்து வந்தன. ஈரானின் இந்த நடவடிக்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் நபர்களுக்கு அச்சத்தை தருகிறது.
இந்த நிலையில் தூக்குத் தண்டனையை ரத்து செய்யுமாறு சர்வதேச அமைப்புகளும் , அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும் ஈரானை வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் இந்த வேண்டுகோளை ஈரான் நிராகரித்துள்ளது. மேலும் ஆப்கனில் தலிபன்களை கொன்றதை ஹாரி ஒப்புக் கொண்ட நிலையில் எங்களுக்கு போதனைகள் வழங்க பிரிட்டனுக்கு எந்த உரிமையும் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் பிரதமர் இப்ராஹிம் ரெய்சி பேசும்போது, “ வன்முறையைல் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட அனைவருக்கு தண்டனைகள் வழங்குவது தொடரும்” என்றார்.
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. மூன்று மாதங்களுக்கும் மேலாக நடந்த இந்தப் போராட்டத்தில் 300-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு ஈரான் தூக்குத் தண்டனை அறிவித்தது. ஆனால், இவற்றின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை. மேலும், போராட்டக்காரர்களில் 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.